பதிலடி கொடுக்கும் தென் ஆப்பிரிக்கா – நங்கூரம் பாய்ச்சிய டீன் எல்கர் சதம் !

Last Modified வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:36 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது தென் ஆப்பிரிக்கா நிதானமாக விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின்  சிறப்பான சதத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இதையடுத்து மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா நிதானமாக விக்கெட்களை விட்டுக்கொடுக்காமல் ஆடி வருகிறது. இன்று களமிறங்கிய டீன் எல்கர் மற்றும் பவுமா கூட்டணியி உடனடியாக பிரித்தார் ஷமி. பவுமா 18  ரன்களில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் களம் வந்த டூ பிளஸ்சி எல்கருடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் டூ பிளஸ்சி 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த குயிண்டன் டி காக்குடன் இணைந்து விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டின் எல்கர் சதமடித்து அசத்தினார். தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்க அணி 68 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. எல்கர் 108 ரன்களுடனும் டி காக் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்இதில் மேலும் படிக்கவும் :