வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (16:22 IST)

எல்கர் 160… டிகாக் சதம் – பதிலடி கொடுத்த தென் ஆப்ப்ரிக்கா !

மூன்றாம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களான எல்கர் மற்றும் டிகாக் ஆகிய இருவரும் சதமடித்துள்ளனர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின்  சிறப்பான சதத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதலில் விக்கெட்களை இழந்துத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்தது.

அந்த அணியின் கேப்டன் டூ பிளஸ்சி 55 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 160 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களம்கண்ட டி காக் சதமடித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 367 ரன்களை சேர்த்துள்ளது. டிகாக் 110 ரன்களுடனும் முத்துசாமி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.