வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:12 IST)

இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் தொடங்கியது…

லக்னோ முதல் டெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில் தொடக்கம்.

500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில், தனியார் ரயில்கள் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது. அதன் படி, டெல்லி-லக்னோ. மும்பை-ஷீரடி, சென்னை-பெங்களூர், திருவனந்தபுரம்-கண்ணூர், மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் இதன் முதன் முயற்சியாக லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்பரேட் ரயிலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் பயணமாக 389 பயணிகள் பயணம் செய்தனர் என கூறப்படுகிறது.

இந்த ரயில் காலை 6.10 மணிக்கு லக்னோவிலிருந்து புறப்பட்டு 12.25 புது டெல்லிக்கு சென்றடையும், அதே போல் மீண்டும் புது டெல்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.