புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (18:05 IST)

நியுசிலாந்தில் ரோஹித் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் – ஷான் பொல்லாக் கருத்து !

இந்திய வீரர் ரோஹித் ஷர்மா இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாண்டு வருகிறார் என்றும் வெளிநாடுகளில் விளையாடுவதை வைத்தே அவரைக் கணிக்க முடியும் என தென் ஆப்பிரிக்க பவுலர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மா லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நீண்டகாலமாக இடம் கிடைக்காமல் தவிக்க இப்போது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் அவரது பேட்டிங் குறித்து கூறியுள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் பவுலர் ஷான் பொல்லாக் ‘ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேரியர் பற்றி கூற பேசினால் இந்தியாவில் அவர் சிறப்பாக ஆடியுள்ளார், ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் அவருக்கு சவால்கள் உள்ளன. அங்கு எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்துதான் அவர் அதற்கு விடையளிக்க முடியும். நியுசிலாந்தில் நடக்கவுள்ள தொடரில் அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்’ எனக் கூறியுள்ளார்.