ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (07:33 IST)

இன்றே என் கடைசிப் போட்டி.. நோ யூ டர்ன்: ஓய்வு பெறுகிறார் அம்பத்தி ராயுடு..!

சென்னை டு சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்றே தனது கடைசி போட்டி என உருக்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு, ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
இன்று தனது கடைசி போட்டி என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் 204 போட்டிகள் 14 சீசன்கள் 11 பிளே ஆப் 8 இறுதி போட்டிகள் ஐந்து கோப்பைகள் பெற்ற அணியுடன் இருந்தேன். இன்று இரவு எனது பயணம் முடிவடைகிறது, இன்று இரவு நடக்கும் இறுதி போட்டி தான் ஐபிஎல் இல் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த போட்டியை நான் உண்மையிலேயே ரசித்தேன், உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva