1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (13:20 IST)

12 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கோப்பையை வென்ற சிஎஸ்கே.. மீண்டும் வரலாறு திரும்புமா?

12 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அதே நாளில் நடைபெறும் இறுதிப்போட்டி ஆன இன்று மீண்டும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
2011 இறுதிபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 205 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. 206 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.2011 போட்டியில் 95 ரன்கள் எடுத்த முரளிவிஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பெற்று சாம்பியன் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva