1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (07:12 IST)

மழையால் ஐபிஎல் இறுதிப்போட்டி ஒத்திவைப்பு.. இன்றும் மழை பெய்தால் என்ன ஆகும்?

மழை காரணமாக நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் மழை பெய்தால் என்ன ஆகும் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம். 
 
ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் இருந்தது. இரவு 10:00 மணி வரை பொறுத்து இருந்து பார்த்த நடுவர்கள் அதன்பின் ரிசர்வ் நாளான இன்று போட்டியை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 
 
இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மழை பெய்தால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்த குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
ஒருவேளை மழை நின்று ஆட்டம் தொடங்கினால் 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என்றும் மிகக் குறுகிய நேரம் இருந்தால் சூப்பர் ஓவர் மட்டும் போடப்பட்டு ஆட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இன்று ஐபிஎல் இறுதிப் போட்டியை நடத்த வருண பகவான் வழி விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva