வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (19:13 IST)

இந்திய ரசிகர்களுக்கு பதிலளித்த ஆப்கான் வீரர் ரஷித் கான்

ஐபிஎல் 2018 சீசனில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கைக்கு ரஷித் கான் பதிலளித்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 சீசனின் ஆப்கான் வீரர் ரஷித் கான் ஹைதராபாத் அணியில் விளையாடினார். ரஷித் கான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து வீரர்களும் வெளியேறினர். 
 
இவரது சிறப்பான பந்துவீச்சு ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டிக்கு வரை செல்ல உதவியாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
 
இவரது ரசிகர்கள் டுவிட்டரில் ரஷித் கான் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று இவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு வெளியுறத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அதிப் மாஷல், வாய்ப்புகளுக்கு நன்றி. எனக்கு தெரியும் ரஷித் கானுக்கு டிமெண்ட் அதிகமாக உள்ளதென்று. ஆனால் அவர் எங்கேயும் செல்ல போவதில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதில் டுவீட் செய்துள்ள ரஷித் கான், கண்டிப்பாக நான் ஆப்கான் வீரர் என்பதில் பெருமடைகிறேன். நான் என் நாட்டில் இருந்தே பாடுபடுவேன். நாங்கள் நாட்டுக்கு தேவையான அமைதியை பரப்புவோம் என்று பதிவிட்டுள்ளார்.