ஆடம் ஸாம்பாவின் கைகளில் என்ன ? – மீண்டும் கிளம்பும் சர்ச்சை !

Last Modified திங்கள், 10 ஜூன் 2019 (15:14 IST)
நேற்றையப் போட்டியில் ஆஸி வீரர் ஸாம்பாவின் கைகளில் உள்ள பொருள் பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ருசிகரமான சம்பவம் நடந்தது.

நேற்றையப் போட்டியில் ஆடம் ஸாம்பா கைகளில் சிறியதாக ஏதோ பொருள் வைத்துள்ளதைப் போன்று புகைப்படம் ஒன்ற் வெளியானது. இதை அடுத்து சமூக வலைதளங்களில் சந்தேகத்துக்குரிய பொருள் என்ன என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டுதான் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் பால் டாம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைப் பெற்று திரும்பியுள்ள நிலையில் மீண்டும் பால் டாம்பரிங் சர்ச்சையா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கெவின் பீட்டர்சன் ’அது ஒன்றுமில்லை. கைகளை சூடாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு பொருள். குளிரான ஆடுகளங்களில் இதை வீரர்கள் பயன்படுத்துவது சகஜம்தான்’ என விளக்கம் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :