திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (22:54 IST)

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!!

ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதி வரும் நிலையில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரத்வி ஷா மற்றும் ஜாக் பிரேஷர் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிட்டாலும் அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் அரை சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 40 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார் என்பதும் இவர்கள் இருவரும் இன்னும் இருக்கும் ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 200 ரன்களை நெருங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி எட்டு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் அடைந்துள்ள நிலையில் குஜராத் அணி எட்டு போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வி நான்கில் வெற்றி என்ற நிலையில் உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கு முக்கியமானது என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva