1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Marcus stoinis became the highest run scorer in chasing IPL history

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டி கடைசி பந்து த்ரில்லராக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். மற்றொரு வீரரான ஷிவம் துபே 27 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இந்த கடினமான இலக்கைத் துரத்திய லக்னோ அணி ஆரம்பத்தில் திணறினாலும் பின்னர் சுதாரித்தது.

அந்த அணியின் மார்கஸ் ஸ்டாய்னஸ் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீரரான நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்ததும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்த அதிரடி அரைசதத்தின் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.

ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கின் போது ஒரு நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அவருடைய சதம் சாதனை படைத்துள்ளது. அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் சேஸிங்கின் போது பால் வல்தாட்டி (120), விரேந்திர சேவாக் (119),  சஞ்சு சாம்சன்(119), ஷேன் வாட்சன் (117) ஆகியோர் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!