வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (09:16 IST)

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

LSG Fan
நேற்று நடந்த சிஎஸ்கே-எல்எஸ்ஜி போட்டியில் லக்னோ அணி வெற்றியின்போது ரசிகர்கள் ஒருவர் முழங்கிய புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.



ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.

ஆனால் லக்னோ சேஸிங் வந்தபோது ரன்களை கட்டுப்படுத்த சிஎஸ்கே பவுலர்கள் தவறினர். இதனால் 19.3 பந்துகளிலேயே லக்னோ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் இறுதியில் காட்டிய அதிரடியால் லக்னோ சூப்பர் வெற்றி பெற்றது.


இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதால் மைதானம் முழுவதும் எக்கச்சக்கமான சிஎஸ்கே ரசிகர்கள் நிறைந்திருந்தனர். சென்னை அணி விக்கெட் வீழ்த்தும்போதெல்லாம் அவர்கள் கோஷமிட்டு உற்சாகப்படுத்தி வந்தனர்.

ஆனால் இறுதியில் லக்னோ வென்றபோது அவ்வளவு மஞ்சள் படைக்கும் நடுவே லக்னோ நீல ஜெர்சி ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியில் முழங்கினார். அந்த புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில் அந்த ரசிகரை கௌரவிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ல்கனோ அணி எக்ஸ் தளம் அளித்த பதிலில் அவரது விவரங்களை மட்டும் தாருங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர். விரைவில் அந்த தீவிர லக்னோ ரசிகர்கள் அழைக்கப்பட்டு லக்னோ அணியால் கௌரவப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K