8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல்… புதிதாக களமிறங்கும் இந்திய அணி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் தவான் உள்பட 8 வீரர்கள் விளையாட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.
நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று அந்த போட்டி இரவு 8 மணிக்கு நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் ஷிகார் தவான் உள்ளிட்ட 8 பேர் விளையாடாமல் புதிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருனாள் பாண்டியாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, செகல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, கிருஷ்ணப்பா கவுதம், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.