செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (11:54 IST)

யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற ஹரப்பா நகரம்! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

யுனெஸ்கோவால் இந்தியாவின் பண்டைய தொல்லியல் பகுதியான ஹரப்பா நகரம் பழம்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பண்டைய கால நாகரிகங்கள் குறித்த தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் இந்தியாவின் சிந்து நதிக்கரையோர பண்பாடான ஹரப்பா நாகரிகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கி.மு 3 ஆயிரத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படும் இப்பகுதியில் ஹரப்பாவின் முக்கிய நகரமான தோல்வுராவை தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் இப்பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.