கிராமப்புறங்களிலாவது பள்ளிகள் திறக்க வேண்டும்! – தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பள்ளி திறப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படிப்பது, தேர்வு எழுதுவது போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேல் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசலான நகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், முதற்கட்டமாக கிராமங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளையாவது திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என கூறியுள்ளது.