திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (13:40 IST)

இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! – ராகுல்காந்தி கேள்வி!

நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈருபட்டு வருவதால் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய எதிர்கட்சிகள் இவ்விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி “நாங்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான். இந்திய அரசு பெகாசஸ் மென்போருளை வாங்கியதா? இல்லையா? அரசு இந்த மென்பொருளை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதா? இல்லையா? இதுகுறித்த தெளிவான பதிலை கூறாமல் இதுகுறித்த எந்த விவாதத்தையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது” என கூறியுள்ளார்.