மே.இ.தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு: வெற்றிக்கு அருகில் இந்தியா!

Last Modified திங்கள், 2 செப்டம்பர் 2019 (07:32 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 468 ரன்கள் இலக்கு என இந்திய அணி நிர்ணயித்துள்ளது
நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் 117 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ரஹானே 64 ரன்களும் விஹாரி 53 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 468 ரன்கள் என்ற இலக்கை சவாலாக எடுத்து கொன மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. கேம்பெல் 16 ரன்களும், பிரத்வெயிட் 3 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்
இன்னும் இரண்டு நாள் மீதம் இருக்கையில் மேற்கிந்திய தீவுகள் அணி 423 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கு இருப்பதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :