வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (17:32 IST)

காஷ்மீர் விவகாரம் : மீண்டும் அணுஆயுதப் போர் ... இம்ரான் கான் மிரட்டல்

சமீபத்தில் மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நிராகரித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் உலக நாடுகள், மற்றும் ஐநாவில் முறையிட்டுப் பார்த்தும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  திறமையற்றவர் என அந்த நாட்டின் எதிர்கட்சியினர் சமீபத்தில் விமர்சித்தனர்.  அதேசமயம் காஷ்மீரீல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் இம்ரான் கான் ஆங்கில நாளேட்டில் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர்  மோடி தலைமையிலான அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசமைப்ப்பு சட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. அந்நாட்டுச் சட்டப்படி இது சட்டத்திற்கு புறம்பானது. விவகாரத்தில்  ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தையு, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுகிடையான சிம்லா ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மக்களின்  மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து மனித உரிமைகளை பறித்து வீட்டில் சிறை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் உலகநாடுகள் எங்களைப் புறக்கணிக்க முடியாது. காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகளை இந்திய செயல்படுத்திவருகிறது. இதை உலக நாடுகள் கவனித்து நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அணு ஆயுதம் கொண்ட இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவ மோதலில் ஈடுபடவாய்ப்புண்டு எனவும் அதில் தெரிவித்துள்ளார்.