வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (18:53 IST)

3வது டி-20 போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

india-srilanka
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில், இந்திய அணி த்ரில்  வெற்றி பெற்றது.

இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

எனவே இன்றைய  மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில், இந்திய அணி சார்பில், இஷான் கிஷன்-கில் இருவரும் தொடர்க்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.

ஷனகா தலைமையிலான இங்கிலாந்து அணியில் கருணா ரத்னா வேகப்பந்து வீச்சாளராகவும், வஹிந்து ஷனகா மீடியம் பவுலராகவும், ஹசரங்கா ஸ்பின் பவுலராகவும்  உள்ளது அணிக்கு பலம் என கூறப்படுகிறது.