வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (23:05 IST)

2வது டி-20 போட்டி: இலங்கைக்கு எதிராக இந்திய அணி போராடி தோல்வி

india-srilanka
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி போராடி தோற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

இன்றைய இரண்டாவது டி 20- போட்டியில்,  ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

இலங்கை அணியினர் 20 ஓவர்கள் முடிவியில் இலங்கை அணி 6விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணியின் உம்ரான் மாலி, 3 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடங்க வீரர்களான இஷான், கில் ஆகிய இருவரும் சொற்க ரன் களில் அவுட் ஆகினர்.

அதன்பின்னர், அடுத்தடுத்து, விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது.

சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். ஹேர்த்திக் பாண்டியா 12 ரன்களும், படேல் 51 ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.


எனவே இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி தரப்பில், ரஜிதா 2 விக்கெட்டும், மதுஷங்கரா , கருணாரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம அளவில் உள்ளனர்.