செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (18:46 IST)

வங்கதேசத்துக்கு 315 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்கம் மிக அபாரமாக இருந்ததாலும், ஒரு கட்டத்தில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டிருந்ததால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.
 
ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒரு சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித்தை அடுத்து கே.எல்.ராகுல் 77 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட் 48 ரன்களும், தோனி 35 ரன்களும், விராத் கோஹ்லி 26 ரன்களும் எடுத்தனர்.
 
வங்கதேச அணியின் ரஹ்மான் 10 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்திய அணி கடைசி ஆறு ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேபோல் முதல் ஆறு ஓவர்களிலும் 36 ரன்களே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீதியுள்ள 32 ஓவர்களில்தான் இந்திய அணி 245 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது