குல்தீப், கேதார் ஜாத்வ் வெளியே… புவி, தினேஷ் கார்த்திக் உள்ளே - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

Last Updated: செவ்வாய், 2 ஜூலை 2019 (14:44 IST)
பங்களாதேஷுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பைப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. பங்களாதேஷுக்கு இந்தப் போட்டிதான் அரையிறுதிக்கு செல்வதற்கான ஒரே திறவுகோல் என்பதால் முழுத் தீவிரத்துடன் விளையாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுவிட்டாலும் கடந்த போட்டியில் மோசமாக விளையாடி விமர்சனங்களை எதிர்கொண்டதால் வெற்றிப் பெறவேண்டியக் கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் மற்றும் கேதார் ஜாதவ் வெளியேற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புவனேஷ்குமார் மற்றும் தினேஷ் கார்த்தி இடம்பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :