1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (06:58 IST)

மே.இ.தீவுகள் அணி போராடி தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா இலங்கை?

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே இலங்கைக்கு இருக்கும் நிலையில் ரன்ரேட் மைனஸில் இருப்பதால் அந்த அணி அரையிறுதிக்கு செல்வது சந்தேகமே. 
 
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேபோல் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைய வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே இலங்கை அணி அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்: 
 
இலங்கை அணி: 338/6
 
பெர்னாண்டா: 104
பெரரா: 64
திரமின்னே: 45
மெண்டிஸ்: 39
 
மே.இ.தீவுகள் அணி: 
 
பூரன்: 118
ஆலன்: 51
கெய்லே: 35
ஹோல்டர்: 26
 
ஆட்டநாயகன்: பெர்னாண்டோ
 
இன்றைய போட்டி: இந்தியா மற்றும் வங்கதேசம்