பாகிஸ்தான் உள்ள வந்தா எல்லாருக்கும் ஆபத்து – வக்கார் யுனிஸ் கருத்து !

Last Modified செவ்வாய், 2 ஜூலை 2019 (14:33 IST)
பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்துதான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்வதற்கு பங்களாதேஷ் உடனானப் போட்டி மிக முக்கியமாக மாறியுள்ளது. ஆனால் அப்படியே வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து அணி நியுசிலாந்திடம் தோற்றால்தான் வெற்றிப் பெற முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் உள்ளது.

இந்நிலையில் வக்கார் யுனிஸ் ஐசிசி இணையதளத்துக்கு எழுதியுள்ள ஒருக் கட்டுரையில் ‘பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்தாகதான் முடியும். இப்போதைய நிலைமை பயங்கரமாகதான் இருக்கிறது. ஆனால் 1992 –ல் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :