1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (15:30 IST)

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைப்பு!

ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். 
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் கொரோனாவை தாண்டியும் ஒலிம்பிக் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன. கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட்டு ஜப்பானில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புவதாய் ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாக குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். 
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். 
 
பிரிட்டன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்ததும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைப்பினர் இவ்வாறு அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவும் கனடாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.