1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (07:53 IST)

கொரோனா வைரஸ் எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் அனைத்து நாடுகளும் அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக பள்ளி கல்வி நிலையங்கள் மூடப்பட்டும், திரையரங்குகள், மால்கள் மூடப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படும் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று இரவு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி ஜேஈஈ என்ற இன்ஜினியரிங் கல்லூரியில் மெயின் தேர்வுகளும் பல்கலைக் கழக தேர்வுகள் மார்ச் 31ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இந்த தேர்வுகளின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
கொரோனா வைரஸ் எதிரொலியாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது