யூரோ கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு: பரபரப்பு தகவல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு:
Last Modified புதன், 18 மார்ச் 2020 (21:30 IST)
யூரோ கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு:
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான கால்பந்து போட்டி என்றால் அது யூரோ கால்பந்து போட்டி தான். இந்த போட்டியை நேரடியாகவும் தொலைக்காட்சிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை யூரோ கால்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தால் இந்த போட்டி ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இதுகுறித்து யூரோ கால்பந்து போட்டியின் நிர்வாகிகள் பேட்டி அளித்த போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் யூரோ கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த போதிலும் ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :