வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (14:31 IST)

தள்ளிப்போகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விவரம் உள்ளே!!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என சற்றுமுன் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
மேலும், 11 ,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி அடைவார்கள் எனவும் அறிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறாது அதன் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.