கால் விரல்களை வைத்து அவரின் குணங்களை அறிய...!

ஜோதிடம் மூலம் எப்படி ஒருவரின் குணாதிசயங்களை அறிய முடியுமோ அதே போல, கால்களில் உள்ள விரல்களை வைத்து ஒருவரின்  குணத்தை கண்டறியலாம். அதன்படி,
1. ஒரு நபருக்கு பெருவிரல் பெரியதாக இருந்தால் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் தன் புத்திசாலித்தனத்தின் மூலம் எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்களின் படைப்பு திறனும் சற்று அதிகமாகவே இருக்கும்.
 
2. காலில் உள்ள இரண்டாவது விரல் பெரியதாக இருப்பவர்கள் நல்ல தலைவராக இருப்பார்கள். அவர்களுக்கு பேச்சாற்றல் சற்று அதிகமாக  இருக்கும். நல்ல முடிவுகளை எடுக்கும் திறன் உண்டு.
3. மற்ற விரல்களை காட்டிலும் மூன்றாவது விரல் சிறியதாக இருக்குமாயின் அவர்கள் வாழ்க்கையை எப்போதும் ஆனதமாக வாழவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
4. நான்காவது விரல் : மற்ற விரல்களை காட்டிலும் நான்காவது விரல் பெரியதாக இருக்குமாயின் அவர்கள் தன் குடும்ப முன்னேற்றத்திற்காக  எப்போதும் உழைப்பவர்களாக இருப்பார்கள்.
 
5. ஐந்தாம் விரல்: பொதுவாக அனைத்து விரல்களும் ஒருவரின் காலில் சிறியதாக இருக்குமாயின், அவர்கள் எப்போதும் குழந்தை தனமாக  இருப்பார்கள். மற்றவர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் மனம் இவர்களுக்கு உண்டு. அதேபோல பதவி ஆசை என்பது இவர்களுக்கு இருக்காது.


இதில் மேலும் படிக்கவும் :