1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஜூன் 2025 (15:54 IST)

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

Shashi THaroor
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய சொத்து என்று பாராட்டியுள்ளார். அவரது இந்த கருத்து, அண்மைக்காலமாக மோடியையும் மத்திய அரசையும் சசி தரூர் பாராட்டிப் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்த போதிலும், சசி தரூர் அதை பொருட்படுத்தவில்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து வெளிநாடுகளில் விளக்கிவிட்டு சமீபத்தில் நாடு திரும்பிய சசி தரூர், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
 
அவர்  "பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது. ஆனால் இதற்கு பரந்த ஆதரவு தேவை. இந்த முயற்சி, உலக அளவில் இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்வதால், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்று துறைகளிலும் இந்தியாவின் செயல்பாடு உலக அளவில் சிறந்து விளங்க வேண்டும்.
 
Edited by Mahendran