1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஜூன் 2025 (17:37 IST)

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கே.எல். ராகுல் நிதானமாக ஆடி வருகிறார். அவருக்கு துணையாக ரிஷப் பண்டும் பொறுப்பாக விளையாடி வருவதால், இந்த போட்டி டிராவை நோக்கி செல்வதாக வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியா ஆறு ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அந்த அணி தற்போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
 
கே.எல். ராகுல் 72 ரன்களும், ரிஷப் பண்டு 31 ரன்களும் எடுத்துள்ளனர். இருவரும் பொறுப்பாக விளையாடி வருவதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 
 
இந்த நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் என்பதால், நாளைக்குள் இந்தியா தனது இன்னிங்ஸை முடித்து, இந்தியா நிர்ணயிக்கும் இலக்கை இங்கிலாந்து எட்டி விடுமா என்பது சந்தேகம் என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, மொத்தத்தில் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran