நேபாளத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள எச்சரிக்கை!..
இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நேபாளத்தை ஒட்டியுள்ள திபெத் - சீன எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கையாக ஏறி உருவாகி அதன்பின் அந்த ஏரியும் உடைந்து வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. பெரு வெள்ளமாக கிளம்பி வழியில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்கள் என எல்லாவற்றிலும் வாரிசுருட்டி சென்றது.
பெருவெள்ளம் காரணமாக வடக்கு நேபாளத்தில் நான்கு மாவட்டங்கள் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டு விட்டது. 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் நேபாளத்தில் கிழக்கு, மத்திய, மேற்கு பகுதிகளில் ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.. வெள்ளை எச்சரிக்கையை அடுத்து நதிகளின் நிலையை கண்காணிக்க ரசுவா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோஷி, நாராயணி, பாக்மதி, மகாகாளி உள்ளிட்ட நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட உடல்களை நேபால ராணுவத்தினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.