1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. censors will be set in himalaya effect on nepal flood

நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..

sikkim
இமயமலையில் உள்ள பணிப் பாறைகள் திடீரென உடைந்து வெள்ளம் வெளியேறியதால் வடக்கு நேபாள பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வடக்கு நேபாளத்தில் நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த ஊர்களில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்கள் என எல்லோரும் நீரில் அடித்து செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்நிலையில், நேபாளத்தில் இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நாட்டின் அருகில் உள்ள சிக்கிம் போன்ற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்த சிக்கிம் அரசு முடிவு செய்திருக்கிறது..

சிறியது, பெரியது என சுமார் 400 பனிப்பாறை ஏறிகள் சிக்கிமில் இருக்கிறது. இதில் ஆபத்தானவை என 16 பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த 16 பணி பாறைகளிலும் விரைவில் சென்சார் பொருத்தப்படவிருக்கிறது. சிக்கிம் மட்டுமல்லாமல் சீனா, திபெத், நேபாள எல்லைக்கு மேலே உள்ள இமயமலை பகுதியில் உள்ள அபாயகரமான பணிப்பாறைகளில் விரைவில் சென்சார் பொருத்தப்படும் என தெரிகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
UGC NET மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை.. 3 பாடங்களுக்கு எப்போது தேர்வு...