1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Nepal Flood Disaster: Families Desperately Await Rescue of Trapped Hydropower Workers

நேபாளர் பேரழிவு: நீர்மின் நிலையத்துக்குள் சிக்கிய 550-க்கும் மேற்பட்டோர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

nepal
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்துக்கு அடியில் உள்ள நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள ஊழியர்களின் குடும்பங்கள் இன்னும் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக திரிஷூலி 3A நீர்மின் நிலையத்துக்குள் சுமார் 40 நேபாள மின்சார ஆணைய ஊழியர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
அவர்களில் ஒருவரின் மனைவி, ஆறு நாட்களாக கணவரை பற்றிய தெளிவான தகவல் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மீட்பு குழுக்கள் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகினாலும், சம்பவ இடத்துக்கு ஜேசிபி இயந்திரமே இன்னும் செல்லவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 40 குடும்பங்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்காக காத்திருக்கின்றன. அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கிடையில், நேபாளத்தின் பல நீர்மின் திட்டங்களிலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பர் திரிஷூலி-1 திட்டத்தில் மட்டும் 550-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரிஷூலி-3B, சிலிமே, லாங்டாங் கோலா உள்ளிட்ட பல திட்டங்களிலும் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
 
இந்த பேரழிவில் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் குடும்பங்களுக்கு நம்பிக்கைக்கும் அச்சத்துக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
யாரும் மீன் சாப்பிடாதீங்க.. நேபாள வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுத்த பீகார் அரசு...