வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (10:08 IST)

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறீய நபர் – சாமர்த்தியமாக போலிஸில் பிடித்து கொடுத்த பெண் !

ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய நபரை ரயில்வே போலிஸார் கைது செய்துள்ளனர்.

கொச்சுவேலி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த பெங்களூரைச் சேர்ந்த மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் பெண் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். அப்போது ரயில் சேலத்தை அடைந்தபோது அந்த பெண்ணின் உடலை தொட்டு சீண்டியுள்ளார் வாலிபர் ஒருவர்.

அவரை போலிஸிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என திட்டம் போட்ட அந்த பெண் ரயில் எர்ணாகுளம் வந்தபோது அவரை ரயில்வேப் போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் கனிஷ் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில்வே போலிஸார் இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்துள்ளனர்.