1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (21:05 IST)

இரயில்வே குகை வழிப் பாதை பொதுமக்களுக்கு பிரச்சினை ? அமைச்சர் நேரில் பார்வை !

கரூர் அருகே சணப்பிரட்டியில் அமைக்கப்பட்டு  வரும்  இரயில்வே குகை வழிப்பாதையினை  தமிழக போக்குவரத்துத் துறை  அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்   திடீர்  ஆய்வு   செய்தார்.

கரூர் அருகே., சணப்பிரட்டியில் மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள  இரயில்வே குகை வழிப் பாதை பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படுவது போல, அந்த பகுதி மக்கள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இந்நிலையில்., திடீரென்று தமிழக  போக்குவரத்துத் துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர்  மாவட்ட  ஆட்சித் தலைவர்  அன்பழகனுடன் நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது., சணப்பிரட்டி  உள்ளிட்ட சுமார் 6 கிராமங்கள் உள்ளே உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எளிதாக்கும் வகையில்.,  இரயில்வே  கிராஸிங்  பகுதியில்  சுமார். ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் தண்டாவளத்திற்கு  கீழே  குகை வழிப் பாதை  அமைக்கப்பட்டு  வருகின்றது என்றும், மேலும், 4.5 மீட்டர் அகலமும்.,  4.5மீட்டர் உயரமும்  கொண்ட வகையிலும்., அணுகுசாலை சுமார்  90  மீட்டர்  நீளத்திலும்  அமைக்கும் வகையில்  இந்த  குகை வழிப்பாதை  பணிகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. 

இந்த  குகைவழிப்பாதை சணப்பிரட்டி வழியாக கட்டப்படுவதால்.,  சணப்பிரட்டி  பகுதியில் உள்ள  பாரதியார்  நகரில்  வசிக்கும்  மக்கள்  தங்களது போக்குவரத்திற்கு  இடையூறு இல்லாத  வகையிலும்.,  தங்கள்  பகுதியில்  இருந்தும்  இந்த  குகை வழிப் பாதை  வழியாக சென்று வர  வழி வகை  செய்யும்  வகையிலும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்றும் அப்பகுதி பொது மக்கள் போக்குவரத்துத்துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கோரிக்கை  வைத்தனர். 

இதனையடுத்து  போக்குவரத்துத் துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.,  குகை வழிப் பாதை  நடைபெறும்  பகுதியில் முழுமையாக  ஆய்வு செய்து  பொதுமக்களின் கோரிக்கைக்கு  ஏற்ற வகையில்.,  சம்மந்தப்பட்ட  துறை அலுவலர்களிடம் கலந்தாலோசித்து மாற்று வழிமுறைகளை  மேற்கொள்ளும்  வகையில் உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும்  பொதுமக்களிடம் தெரிவித்தார்.