1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (15:48 IST)

ஓடும் ரயிலில் ஏறமுயன்று.. கீழே விழுந்த நபர் ....என்ன நடந்தது ? வைரல் வீடியோ

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடனும், சொந்த ஊரிலும் கொண்டாட   கிளம்பிச் செல்வது வழக்கம். இதற்காக , அரசு சிறப்பு,மக்களுக்காக  ரயில் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயிலி, காலை 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒருரயில் புறப்பட்டுச் சென்றது.
 
அப்போது, ஒரு பணி அவசரமாக ரயிலில் ஏற  முயற்சித்தார்.ஆனால் படிக்கட்டில் தடுமாறி விழுவதற்கு சென்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காலவர் ஜெயன் என்பவர் அந்த நபரை காப்பாற்றினார். பிறகு பயணியை ஓய்வறையில் அமரவைத்தார்.
 
இதற்காக ரயில்வேதுறை சார்பில், காவலர் ஜெயனுக்கு பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.