சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!
சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என அமெரிக்கா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, முதல் வேலையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் கைகள், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதன் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடு கடத்தப்படுவதற்காக விமானத்தில் ஏற தயாராக இருக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கான வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
சில வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவில், ஒரு அதிகாரி சங்கிலியால் கட்டப்பட்ட மனிதர்களை விமானத்தில் ஏற தயார்படுத்தும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொழிலதிபர்கள் சிலர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran