திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (12:19 IST)

பற்றி எரிந்த பாகிஸ்தான் ரயில்: பயணிகள் ஓட்டம்; 46 பேர் பலி!

பாகிஸ்தானில் ரயில்பெட்டி தீப்பிட்டித்த விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தேஸ்காம் என்ற ரயில் தெற்கு பஞ்சாபிலிருந்து ராவல்பிண்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மூன்று பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது. தீயை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பலர் ஓடும் ரயிலிலிருந்து குதித்ததால் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ரயில்கள் மோசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் பலர் தங்களுக்கு தேவையான உணவுகளை ரயில்களுக்குள்ளேயே சமைப்பதாகவும், இதற்காக அனுமதி பெறாமல் கேஸ் சிலிண்டர் போன்றவற்றை எடுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாக எடுத்து செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்துதான் தீ விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீ காயத்தால் இறந்தவர்களை விட ரயிலிலிருந்து குதித்து இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.