வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:00 IST)

திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமை: இளம்பெண் தர்ணா போராட்டம்!

திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமை: இளம்பெண் தர்ணா போராட்டம்!
திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக இளம்பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த படப்பை என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் நாவலூர் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது
 
 இந்தத் திருமணம் நடந்து ஐம்பத்தி ஆறு நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்வதாகவும் தனது பெற்றோருடன் ஜெயஸ்ரீ மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருமணத்தின்போது 40 சவரன் தங்க நகைகள் தனக்கு சீர்வரிசையாக செய்துவிட்டதாகவும் ஆனாலும் மேலும் பணம் நகைகள் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது