வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (10:04 IST)

கர்மா திருப்பி தாக்குகிறது… கனடா பிரதமரை விமர்சனம் செய்த கங்கனா!

கனடா நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கனடா நாட்டில் கோவிட் தடுப்பூசி கட்டாயம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அந்நாட்டில் இதனால் பதற்றமான சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

கடந்த ஆண்டு இந்தியாவில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு ஆதரவாக பேசியதை குறிப்பிட்டு கங்கனா விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘ கனடிய பிரதமர் ட்ரூடோ இந்திய போராட்டக்காரர்களை ஆதரித்தார். ஆனால் இப்போது அவரது நாட்டின் போராட்டங்களுக்கு மத்தியில் அவரின் பாதுகாப்புக்கு பயந்து ரகசிய இடத்தில் ஒளிந்துகொண்டுள்ளார். ஹ்ம்ம்ம்.. கர்மா விதிகள் உங்களை திருப்பி தாக்குகிறது’ எனக் கூறியுள்ளார்.