1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students in Puducherry protest against Budget 2022

பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் அல்வா கொடுக்கும் போராட்டம்!

#Budget2022
மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
 
நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், மக்களுக்கு தேவையான முறையான அறிவிப்புகள் இல்லை என எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம், பட்ஜெட்டில் எந்த சலுகையும் அறிவிக்கலாம் மக்களுக்கு மத்திய அரசு அல்வா கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டியும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அல்வா கொடுத்து போராட்டம் நடத்தினர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தேர்தல் களத்தில் திருநங்கைகளை இறக்கிய கட்சிகள்! – பரபரக்கும் தேர்தல்!