தொடர்புடைய செய்திகள்
- ஆளுனரை திரும்ப அழைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உரை
- நீட் விலக்கு மசோதா: திருப்பி அனுப்பிய ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
- பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் அல்வா கொடுக்கும் போராட்டம்!
- கர்மா திருப்பி தாக்குகிறது… கனடா பிரதமரை விமர்சனம் செய்த கங்கனா!
- பந்தல் போட கூட அனுமதி தராத திமுக அரசு - சீமான் காட்டம்!
ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபையில் ஏற்பட்ட நீட் விலக்கு மசோதாவை நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர்
இந்த நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்
இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அவரும் அவருடைய கட்சி தொண்டர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
