செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (21:53 IST)

ஐயா, இல்லைனா தற்கொலை தான் முடிவு..இளைஞருக்கு உதவிய முதல்வர்

இன்று டுவிட்டர் பக்கத்தில் ஒரு இளைஞர் , என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா  வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன். மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பறாங்க… வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவவும் என்று பதிவிட்டு அதை தமிழக முதல்வருக்கு டுவிட் செய்த இளைஞர், ஐயா இல்லைனா தற்கொலை தான் முடிவு என்று பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,கவலை வேண்டாம் தம்பி, விஜயபாஸ்கருக்கும், சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷுக்கும் டெக் செய்து, அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.

இதற்கு, சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷ் முதல்வருக்கு பதில் டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், அவரிடம் பேசிவிட்டேன். அவர் கடலூரில் இருக்கிறார். உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திறோம் என பதிவிட்டுள்ளார், முதல்வரின் இந்த துரிதமான நடவடிக்கைகு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.