1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN chief minister wrote a letter to PM Modi

விமான சேவை இப்போ வேண்டாம்! – பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!

Tamilnadu
தமிழகத்தில் விமான சேவைகள் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழகத்தில் விமான சேவைகளை ஒத்தி வைக்க முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு மே இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 முதல் சென்னையிலிருந்து பெங்களூர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானசேவைகள் தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விமான சேவைகளை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தொடங்க வேண்டாம் என்றும், ஜூன் மாதம் முதல் விமான சேவையை தொடர கோரியும் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கும் கட்சி திமுக: விளாசிய துரைசாமி!