1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Youngster dead in Chithirai Tiruvizha

தேர் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் - சோகத்தில் முடிந்த சித்திரை திருவிழா

தேர் சக்கரம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
நாகை மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. உத்திராபதிஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. தேர் திரும்புகையில் சக்கரத்தில் சிக்கி 60 அடி உயர சப்பரத்தின் சக்கரம் வயிற்றில் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் தஞ்சை அருகே களமேடு என்ற பகுதியில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தஞ்சை மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே. 
அடுத்த கட்டுரையில்
திமுக பிரமுகரை கூலிப்படை வைத்து கொலை செய்த 4 பேர் கைது!