வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:50 IST)

மதுரை சித்திரை திருவிழா: கோலாகலமாக தொடங்கியது தேரோட்டம்

therottam
மதுரை சித்திரை திருவிழா: கோலாகலமாக தொடங்கியது தேரோட்டம்
மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக கோலாகலமாக நடந்து வருகிறது 
 
நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது என்பதும் இந்த திருக்கல்யாணத்தை நேரில் பக்தர்கள் கண்டு ரசித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரையில் உள்ள நான்கு மாசி வீதிகளான கீழமாசி வீதி மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி மற்றும் தெற்கு மாசி வீதிகளில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது 
 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தை கண்டு ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது