1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (10:05 IST)

மதுரை சித்திரை திருவிழா - கூட்ட நெரிசலில் 2 பேர் பலி

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 
 
பின்னர் அங்கு கூடிய பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.