ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (13:58 IST)

சென்னையில், உலக புத்தக கண்காட்சி: அமைச்சர் கே.என். நேரு தகவல்

KN Nehru
சென்னையில் அடுத்த ஆண்டு உலகப் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார்
 
சேலத்தில் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் கேஎன் நேரு அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை சந்தித்து சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
 
மேலும் 100 கோடி மதிப்புள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் உருவாக்கினார். தற்போது முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் போது அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். சேலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் கற்றுக்கொள்கிறேன்
 
Edited by Mahendran