ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (08:51 IST)

போர்ச்சுக்கல் கொடியை கிழத்த பாஜக தொண்டருக்கு தர்ம அடி! – கேரளாவில் பரபரப்பு!

Football
கேரளாவில் கட்சி கொடி என நினைத்து போர்ச்சுக்கல் நாட்டுக் கொடியை கிழித்த பாஜக தொண்டரை கால்பந்து ரசிகர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டிகளை காண ஆர்வம் காட்டி வரும் நிலையில் கேரள கால்பந்து ரசிகர்களும் தீவிரமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவின் ரசிகர்கள் போர்ச்சுக்கலுக்கும், லியோனல் மெஸ்ஸி ஆதரவாளர்கள் அர்ஜெண்டினாவுக்கும் ஆதரவாக கேரளாவின் பல பகுதிகளில் ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதுடன், அந்நாட்டு கொடிகளையும் ஆங்காங்கே வீதிகளில் மாட்டி வைத்துள்ளனர்.

அவ்வாறாக கேரளாவின் ஒரு பகுதியில் ரொனால்டோ ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டு கொடியை நட்டு வைத்துள்ளனர். அதை கட்சி கொடி என நினைத்த பாஜக தொண்டர் ஒருவர் அதை கிழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கால்பந்து ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K